கடலூர் மாவட்டம் அருகே ஒரு கல்லூரி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும், ராமநத்தம் ஏரியாவை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கல்யாணம் ஏற்பாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாப்பிள்ளை ஊரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவீட்டார் சேர்ந்த உறவினர்கள் சுற்றம் சூழ மணமக்களை வாழ்த்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த திருமண மண்டபத்திற்கு திடீரென காவல்துறை உள்ளே நுழைந்து கல்யாணத்தை நிறுத்தினர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது மாணவிக்கு 18 வயது பூர்த்தி அடையாதாதல் போலீஸ் திருமணத்தை நிறுத்தியுள்ளது. கல்லூரி மாணவியின் சான்றிதழ்களை வாங்கி பார்த்தபோது, அந்த மாணவிக்கு 18 வயது பூர்த்தியடைய இன்னும் 4 மாதங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மணமக்களின் பெற்றோர்களிடம் மாணவிக்கு 18 வயது பூர்த்தி அடையாமல் கல்யாணம் செய்து வைக்க மாட்டோம் என காவல்துறை எழுதி வாங்கிக் கொண்டனர். மேலும் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டு கொண்டனர். இப்படி ஒரு திருமணம் நடைபெறுகிறது என்று கலெக்டருக்கு புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.