Home » செய்திகள் » இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொண்ட கொலம்பியா அரசு- அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொண்ட கொலம்பியா அரசு- அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொண்ட கொலம்பியா - அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவிப்பு!

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொண்ட கொலம்பியா அரசு: கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் ஹமாஸ் அமைப்பினரின் முழுவதுமாக அழிக்கும் வரை இந்த தாக்குதல் தொடரும் என்று  இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும்  இஸ்ரேல் ராணுவம் தாக்கியதில் 34,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அப்பாவி மக்களும் அடங்கும்.

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொண்ட கொலம்பியா அரசு

இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ரஃபா நகரிலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில்  இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார். அதாவது அதிபர் பெட்ரோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது,  இனப்படுகொலை செய்த அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் காசாவில் ஈவு இரக்கம் பார்க்காமல் நாடாகும் மனித உரிமை மீறலை உலகம் ஒரு போதும் வேடிக்கை பார்க்காது. இதை அனைத்து நாடுகளும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் ஸ்டிரைக் – தேர்வு விதிமுறைகளை கடுமையாக்கிய கேரள அரசு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top