மறைந்த விவேக் மகள் திருமணம்
தமிழ் சினிமாவில் கருத்தோடு நகைச்சுவை செய்து மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் தான் காமெடி நடிகர் விவேக். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது தடுப்பூசி செலுத்திக் கொண்ட அடுத்த நாள், மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் இழப்பை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஆனால் அவருடைய மகன் சிறு வயதிலே நோய் காரணமாக இறந்துவிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் அவருடைய மகளான தேஜஸ்வினிக்கும் பிரபு என்பவருக்கும் இன்று விவேக் வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. இதையடுத்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விவேக் கனவாக வைத்திருந்த “கிரீன் கலாம்” என்ற திட்டத்தின் மூலம் அவரது மகள் தேஜஸ்வினி திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், மூலிகை பூச்செடிகளைக் கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.