
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது பாஜக கட்சியில் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவருடைய கணவர் இணைந்துள்ளார்.
பாஜக கட்சியில் இணைந்த காமெடி தம்பதியினர்
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தற்போது அரசியல் கட்சியினர் பரப்புரை ஆற்றி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களும் கட்சிக்காக மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். அதன்படி பாஜக கட்சிக்காக நடிகை நமீதா, நடிகர்கள் செந்தில், கூல் சுரேஷ், டான்ஸ் மாஸ்டர் கலா ஆகியோர் ஆதரவாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில் தற்போது காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் பாஜகவில் இணைந்தனர். அதாவது கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் இருவரும் பாஜகவில் இணைந்தனர். மேலும் அவர்கள் இருவரும் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக கட்சியில் குஷ்பு, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா உள்ளிட்டோரும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.