
நாம் பயன்படுத்தும் Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களில் ஒன்றாக சமையல் எரிவாயு இருந்து வருகிறது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றம் காணப்படும்.
அதாவது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருவதால் தான் ஒவ்வொரு மாதமும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ள, நிலையில் புதிய விலை பட்டியல் வெளியாகியுள்ளது.
அதாவது கடைகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மாதம் 1840.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதன்படி ரூ 1,809.50-க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக கிட்டத்தட்ட 151 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால் ஹோட்டல் உள்ளிட்ட கடை உரிமையாளர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
ஆனால் வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாததால் தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 என்ற அளவிலேயே இருந்து வருகிறது.
இதனால் இல்லத்தரசிகள் சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் மற்ற மெட்ரோ நகரங்களிலும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மும்பையில் 1,598 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1,756 ரூபாயாகவும், டெல்லியில் 1,646 ரூபாயாகவும், வணிக சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு இதை கிளிக் செய்யுங்கள்
NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு