2026 காமன்வெல்த் போட்டி - ஹாக்கி & துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம்!!2026 காமன்வெல்த் போட்டி - ஹாக்கி & துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம்!!

2026 காமன்வெல்த் போட்டி: 2026-ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டன் பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். எனவே இந்த போட்டியில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்கள் வாங்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று அனைவராலும் நம்பப்பட்டு வந்தது.

2026 காமன்வெல்த் போட்டி

இந்நிலையில் 2026 காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளது. அதே போல் பேட்மிண்டன், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் உள்ளிட்ட போட்டிகளும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருந்த விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால் விளையாட்டு ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் 1998-ல் இருந்து காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி விளையாட்டு  இடம்பெற்று வருகிறது. ஆனால் இம்முறை ஏன் நீக்கப்பட்டது தொடர்பான காரணம் என்பது குறித்து எந்த ஒரு முக்கியமான தகவல் வெளியாகவில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – தீபாவளி கொண்டாட்டத்திற்கு செக் வைத்த டாஸ்மாக் நிர்வாகம்!

இதனை தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (CGF) இந்த விளையாட்டுகளை நடத்துவதற்கான செலவைக் குறைக்கவே இது மாதிரியான நடவடிக்கையை பரிசீலித்து வருகிறது. எனவே இந்த நிலையில் செலவினங்களை குறைக்க ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகள் பட்டியலில் இடம் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட் 

ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி

புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *