பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு - என்ன காரணம் தெரியுமா?பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு - என்ன காரணம் தெரியுமா?

Breaking News: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு: சமீபத்தில் தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வை அரசு அறிவித்ததில் இருந்து இப்பொழுது வரை பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. political action committees

இதில் பாமக கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும்  மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வந்தனர். political

மேலும் அமைதியாக நடந்து கொண்டிருந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரதீப், இலவச தொலைக்காட்சி, மின்விசிறி ஆகியவற்றை தூக்கி போட்டு உடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. tamilnadu party

Also Read: தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த தேதியில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அதுமட்டுமின்றி அதே நேரத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க.வினர் பலரும் மின்விசிறி, தொலைக்காட்சியை உள்ளிட்டவைகளை உடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து  இந்த சம்பவம் தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   pmk party

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *