கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது: தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக கூறி சோசியல் மீடியாவில் தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட போன்ற ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் சந்தோஷத்தில் இருந்து வந்தனர். மேலும் அந்த போட்டோவில் 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப படுவதாகவும், இந்த பணிக்கு மாதம் ரூ 10 ஆயிரம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து இந்த அறிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்திடம் தொடர்ந்து பல பேர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ” இணையத்தில் வைரலாகி வரும் கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்புவது தொடர்பான தகவல் முற்றிலும் போலியானது. இது போன்ற எந்த ஒரு அறிவிப்பும் நாங்கள் வெளியிடவில்லை. எனவே இதை யாரும் நம்ப வேண்டாம். இது மாதிரியான மோசடி நடவடிக்கை குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.