Home » செய்திகள் » ‘நடிகர் விஜய்க்கு பட்டால்தான் தெரியும்’ – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து !

‘நடிகர் விஜய்க்கு பட்டால்தான் தெரியும்’ – காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து !

'நடிகர் விஜய்க்கு பட்டால்தான் தெரியும்' - காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து !

தற்போது சென்னை பனையூரில் நடைபெற்ற விஜய் கட்சி கொடி அறிமுக விழா கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் நடிகர் விஜய்க்கு பட்டால்தான் தெரியும் என கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய், வரும் 2026ல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என அடுத்தடுத்து நடத்தினார்.

அந்த வகையில் இன்று கட்சியின் கொடி மற்றும் கட்சியின் பாடல் அறிமுக நிகழ்ச்சி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபனா ஆகியோருடன் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார் விஜய். அந்த பாடலில் ‘தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது’ ‘வீரக் கொடி விஜயக் கொடி’ உள்ளிட்ட வரிகள் இடம் பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு பதிலளித்த கார்த்திக் சிதம்பரம் ‘நடிகர் விஜய்க்கு பட்டால்தான் தெரியும்’ என தெரிவித்துள்ளார்.

‘மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ – தவெக பாடலில் இடம்பெற்ற அண்ணா மற்றும் எம்ஜிஆர் படங்கள் !

அதன் பிறகு ‘தனிக்கட்சி நடத்துவது குறித்து நடிகர் விஜய்க்கு பட்டால்தான் தெரியும். மேலும் கட்சியை அறிவிப்பது பெரிய விஷயம் அல்ல, நிலைப்பாடு என்ன என்பதை கூற வேண்டும்.

அத்துடன் ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் விஜய்யின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு விஜய் கொடியை அறிமுகம் செய்ததை வைத்தும் மட்டும் எதையும் கூற முடியாது என்று கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top