காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வருமான வரித்துறை அபராதம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபராதம் நோட்டீஸ்:
நாட்டின் 18வது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சியினரை வருமான வரி துறை கண்காணித்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியை தான் மத்திய வருமான வரித்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கிய நிலையில், கிட்டத்தட்ட ரூ.135 கோடியை பறிமுதல் செய்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வருமான வரித்துறை ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளது. அதாவது கடந்த 2017 – 18ம் நிதியாண்டில் இருந்து 2021 – 22 நிதியாண்டு வரை கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வருமான வரி தாக்கல் செய்யப்படவில்லை என கூறிய நிலையில், அதற்கான வட்டியும் முதலுமாக சுமார் 1700 கோடி ரூபாயை இப்பொழுது செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே இது குறித்து காங்கிரஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.