டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் - முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் !டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் - முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் !

டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் 8 ஆம் தேதி டெல்லியில் தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் பாஜக தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

அத்துடன் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2 வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் வெற்றி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களை ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சி 10 சதவீதத்திற்கும் குறைவான எம்.பி.க்களை கொண்டிருந்ததால் மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து மக்களவையில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை செய்ய டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வரும் ஜூன் 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண்… என்ன நடந்தது? வெளியான ஷாக்கிங் தகவல்!!

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *