விஜய் கட்சிக்கு வந்த முதல் சர்ச்சை.., TVK கட்சி தமிழகத்தில் ஏற்கனவே இருக்கா?.., இந்தா ஆரம்பிச்சுட்டாங்கலா!!விஜய் கட்சிக்கு வந்த முதல் சர்ச்சை.., TVK கட்சி தமிழகத்தில் ஏற்கனவே இருக்கா?.., இந்தா ஆரம்பிச்சுட்டாங்கலா!!

தளபதி விஜய் சமீபத்தில் தனது கட்சி பெயரை “தமிழக வெற்றி கழகம்” என்று அறிவித்த நிலையில், இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் விமர்சனங்களையும் முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்சி விவகாரம் குறித்து விஜய்க்கு முதல் சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது விஜய் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயரில் தவறுகள் இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின்  ஆங்கில சுருக்கம் TVK என்று  வருகிறது. எங்கள்  தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆங்கில சுருக்கமும் TVK தான். எனவே விஜய் தனது கட்சியின் பெயரில் ஏதேனும் ஒரு வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்த வாய்ப்பு இருக்கிறது. அப்படி தேர்தல் ஆணையம் வலியுறுத்தவில்லை என்றால்  அதை நாங்கள் வலியுறுத்தி  மனு கொடுப்போம் என்று கூறியுள்ளார். 

பிளஸ் 1 மாணவியை சீரழித்த 18 இளைஞர்கள்.., இன்ஸ்டா காதலால் வந்த விபரீதம்.., எங்கே? என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *