Home » சினிமா » ஜூட் விட்ட வெங்கடேஷ் பட்.., CWC 5ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவி செல்ல குட்டி., அப்ப அதுக்கு பஞ்சம் இருக்காது!!

ஜூட் விட்ட வெங்கடேஷ் பட்.., CWC 5ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவி செல்ல குட்டி., அப்ப அதுக்கு பஞ்சம் இருக்காது!!

ஜூட் விட்ட வெங்கடேஷ் பட்.., CWC 5ல் போட்டியாளராக களமிறங்கும் விஜய் டிவி செல்ல குட்டி., அப்ப அதுக்கு பஞ்சம் இருக்காது!!

போட்டியாளர்கள் யார் யார்?

குக் வித் கோமாளி சீசன் 5 மக்களின் பெரிய எதிர்பார்ப்பில் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோ வீடியோ கூட சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக ஷோவின் அச்சாணியாக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் விலகுவதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக சர்க்கஸ் படத்தில் கதாநாயகனாக நடித்த மதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்றுள்ளார். மேலும் இந்த ஷோவை வழக்கம் போல ரக்ஷன் தொகுத்து வழங்க, நிகழ்ச்சியின் தூண்களாக இருக்கும் புகழ், பாலா, குரேஷி, சுனிதா, சரத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5-ல் கலந்து கொள்ள இருக்கும் Cook-கள் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த சீசனில் குக்குகளாக கடந்த பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற வினுஷா, விஷ்ணு மற்றும் தினேஷ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதுமட்டுமின்றி  தம்பி ராமையாவின் மகன் உமாபதி, பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை ஹேமா மற்றும் விஜய் டிவி செல்லக்குட்டி பிரியங்கா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்கிரதை.., உலகத்துக்கே ரெட் அலர்ட் கொடுத்த ஐ.நா சபை…, அழிவின் விளிம்பில் நமது கிரகம்.., பீதியில் மக்கள்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top