CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார் - இது தான் தவறான விஷயம் சொன்ன குரல் மண்ணுக்குள் புதைந்தது - ரசிகர்கள் அதிர்ச்சி!CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார் - இது தான் தவறான விஷயம் சொன்ன குரல் மண்ணுக்குள் புதைந்தது - ரசிகர்கள் அதிர்ச்சி!

CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்: சோசியல் மீடியா மூலம் பிரபலமாகி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோ மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் பிஜிலி ரமேஷ். இவர் சில படங்களில் நடித்துள்ளார். அதன்படி பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை தக்க வைத்தார். youtube fame

CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்

அவருடைய காமெடியான பேச்சு இது தான் தவறான விஷயம் வேண்டாம் பிலிப்ஸ் போன்ற வசனங்கள் இன்றும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் அவருக்கு அதிகமான மது பழக்கம் இருந்ததால் அவரது உடல்நிலை கடந்த சில மாதங்களாக மோசமாக இருந்து வந்தது. kollywood news

குறிப்பாக அவருடைய கால்கள் வீங்கி நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவருடைய குடும்பம் வறுமையில் வாடியது. அவருடைய மனைவி உதவி கேட்டு வீடியோ போட்ட நிலையில், பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வந்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த பிஜிலி ரமேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். cook with comali

Also Read: விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்? வெளியான பரபரப்பு தகவல்!!

அவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார். இவரின் இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. bijili ramesh passed away

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்

திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து

கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *