குக் வித் கோமாளி புது நடுவர் யார் தெரியுமா? .., அட இந்த பட நடிகரா?.., இத யாரும் எதிர்பார்க்கலேயேப்பா!!குக் வித் கோமாளி புது நடுவர் யார் தெரியுமா? .., அட இந்த பட நடிகரா?.., இத யாரும் எதிர்பார்க்கலேயேப்பா!!

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் நம்பர் 1 ஷோவாக இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது மக்கள் 5வது சீசனுக்காக பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த ஷோவில் இருந்து வெங்கடேஷ் பட் விலக போவதாக அறிவித்த நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமு விலக போவதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் 5வது சீசனில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

வெங்கடேஷ் பட் விலகிய நிலையில் அவருக்கு பதில் யார் நடுவராக வர போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் அவருக்கு பதில் செஃப் சுரேஷ் களமிறங்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குக் வித் கோமாளி சீசன் 5 ல் செஃப் தாமுடன் ஒரு புது நடுவரை களமிறக்க இருக்கிறதாம் விஜய் டிவி. அது வேற யாரும் இல்லை, மெஹந்தி சர்க்கஸ் பட நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் புது நடுவராக வர இருக்கிறார். மேலும் அவர் ஷோவில் நுழைவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது. அவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

மக்களே இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள்… 2299 கிராம உதவியாளர் காலிபணியிடங்கள்., அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *