Home » சினிமா » குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்?.., வேறு சேனலுக்கு அடியெடுத்து வைக்க போகிறார்களா?

குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்?.., வேறு சேனலுக்கு அடியெடுத்து வைக்க போகிறார்களா?

குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்?.., வேறு சேனலுக்கு அடியெடுத்து வைக்க போகிறார்களா?

குக் வித் கோமாளி சீசன் 5

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருந்து  வருவது தான் குக் வித் கோமாளி. சமையலை மையமாக வைத்தும், கோமாளிகள் அடிக்கும் லூட்டியை வைத்தும் தான் இந்த ஷோ உலக அளவில் பிரபலமாகியுள்ளது. இதுவரை நான்கு சீசன் கடந்த நிலையில், தற்போது 5வது சீசன் விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இந்த ஷோவின் நான்கு சீசன்களிலும் நடுவராக இருந்து வந்த செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் 5வது சீசனில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளனர். இதை கேட்ட ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் ஏன் வரவில்லை என்று பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஒரு வேலை புது சமையல் நிகழ்ச்சிக்காக வேறு சேனல் செல்கிறார்களா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இல்லையென்றால் குக் வித் கோமாளி சீசன் 5க்காக ப்ரோமோஷன் பணிகளுக்காக இப்படி ஒரு வீடியோவை அவர்கள் வெளியிட்டார்களா என்று தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்க்கலாம். 

ICUவில் மருத்துவர் பார்த்த வேலை?.., பாலியல் கொடுமைக்கு ஆளான 24வயது இளம் பெண்.., போலீஸ் கைது!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top