
குன்னூர் பழக்கண்காட்சி 2024 . நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தை முன்னிட்டு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கோடைகாலத்தை பொறுத்தவரை நீலகிரியில் குளிர் சீதோஷண நிலவுவதால் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை காண வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடை விழாவின் இறுதி நிகழ்வான குன்னூர் பழக்கண்காட்சி இன்றுமுதல் தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் பழக்கண்காட்சி 2024 !
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
குன்னூர் பழக்கண்காட்சி :
நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிம்ஸ் பூங்காவில் 64 வது பழக்கண்காட்சி இன்று முதல் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பழக்கண்காட்சிக்காக டன் கணக்கான பழங்களைக் கொண்டு பல்வேறு உருவங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு – கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !
அந்த வகையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் குன்னூர் பழக்கண்காட்சி வரும் மே 26 ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.