உலக நாடுகளை கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற வைரஸ் தனது பிடியில் வைத்திருந்த நிலையில், தற்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். ஆனாலும் முழுவதுமாக இந்த வைரஸை அழிக்க தற்போது வரை அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மகாராஷ்ட்ரா, கர்நாடகம், கோவா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் கோரா தாண்டவத்தை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து மருத்துவ சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி 60 வயதுகுட்பட்டவர்கள், இணை நோயாளிகள், மாற்று உறுப்பு செய்தவர்கள் என அனைவர்க்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
மறைந்த கேப்டனின் தாய் தந்தையா இது? இதுவரை யாரும் பார்த்திடாத அரிய வகை புகைப்படம்!!