பொதுவாக குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் முக்கியமான ஒன்று தான் ரோஸ் கலர் பஞ்சுமிட்டாய். இதற்கு 90ஸ் கிட்ஸ் மட்டுமின்றி இப்போ இருக்கும் 2k கிட்ஸ் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பஞ்சு மிட்டாயில் ரோஸ் நிறம் வருவதற்காக ஒரு ரசாயனத்தை கலந்து வருவதாக கூறப்பட்டது. சொல்ல போனால் அந்த ரசாயனத்தால் கேன்சர் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உணவு துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ரோடமின் பி என்ற நிறமி சேர்க்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. எனவே பஞ்சு மிட்டாய் வியாபாரிகளிடம் இருந்து நச்சுத்தன்மை வாய்ந்த நிறமி மற்றும் பஞ்சு மிட்டாய்-களையும் அதிகாரிகள் கைப்பற்றியதோடு, உரிய லைசென்ஸ் பெறும் வரை விற்க தடை விதித்துள்ளது.
இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்னை மெரினா கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்க்களை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெற்றோர்கள் இதை குழந்தைகளுக்கு வாங்கி தர வேண்டாம் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.