குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் - முழு தகவல் இதோ !குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் - முழு தகவல் இதோ !

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு. தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பிரதான அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர். இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல வாரங்களுக்குப் பிறகு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தற்போது அதிகளவு மழை பெய்து வருவதால் ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை ஆய்வு மையம் தகவல் !

இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் குற்றாலத்தில் குளிக்க செல்லக்கூடாது என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காவல்துறையினர் சார்பில் அந்த சிறுவனை தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *