குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திடீர் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கே குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர்.
குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு
இந்நிலையில் அந்த பகுதியில் குளித்தக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். மேலும் 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குற்றாலத்திற்கு குளிக்க சென்ற சுற்றுலாப்பயணிகளிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு :
இதனையடுத்து குற்றாலத்தில் உள்ள பழைய அருவி மற்றும் மெயின் அருவி ஆகிய இரு அருவிகளையும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் விட தென்காசி மாவட்ட நிர்வாகம் முடிவு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
100 நாள் வேலைதிட்டதிற்கான ஊதிய உயர்வு – ரூ.294 ல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
ஏற்கனவே குற்றாலம் ஐந்தருவியானது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தற்போது பழைய அருவி மற்றும் மெயின் அருவி ஆகிய இரு அருவிகளையும் வனத்துறை நிர்வாகத்தின் கீழ் விட பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.