கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்தியா மற்றும் உலக அளவில் கொரோனா நோய்த்தொற்று பரவியபோது, அதனை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அத்துடன் கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது வழங்கியது. மேலும் இதன் செயல்திறன் 81 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இதன் செயல்திறன் 70 சதவீதம் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் :
இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தற்போது தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர், ஜிம், திருமண விருந்து, திருவிழாக்கள் போன்ற பல்வேறு இடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Unhappy Leave அறிவித்த பிரபல சூப்பர் மார்க்கெட் ! ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் !
இதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின்னரே இந்த உயிரிழப்பு நிலை காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்த இந்த சூழ்நிலையில் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனத்தின் ஒப்புதல் பற்றிய தகவல் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.