Home » செய்திகள் » பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்?.,. மக்களவை தேர்தலில் போட்டி?.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்?.,. மக்களவை தேர்தலில் போட்டி?.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்?.,. மக்களவை தேர்தலில் போட்டி?.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

மக்களவை தேர்தலில் போட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரராக ஜொலித்தவர் தான் யுவராஜ் சிங். 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்து உலக கோப்பைக்கு முக்கிய காரணமாக விளங்கிய அவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். சொல்ல போனால் தற்போது பேமஸாக இருக்கும் எம்.எஸ். தோனி அளவுக்கு இல்லை என்றாலும், இவருக்கு என்று இப்பொழுது வரை ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. தற்போது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட நிலையில், அரசியலில் குதிக்க இருப்பதாகவும், அதுவும் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி அவர் பாஜக கட்சியில் இணைந்து அவருடைய சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிட போவதாக சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி வந்த நிலையில் இது குறித்து அவரே ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ” சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளுக்கு மாறாக, நான் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. என்னுடைய ஆர்வம் பல திறமைகளை கொண்டு விளங்குபவர்களுக்கு  ஆதரவளிப்பதிலும் உதவுவதிலும் தான் இருக்கிறது. மேலும் நான் நடத்தி வரும் அறக்கட்டளையின் மூலம் அதைத் தொடர்ந்து செய்வேன் @YOUWECAN எங்களின் சிறந்த திறனுக்கு ஒன்றாக மாற்றத்தை உருவாக்குவோம் என பதிவிட்டுள்ளார். 

ஹோட்டலில் பாம் வைத்து எஸ்கேப்பான நபர்.., சிசிடிவியில் சிக்கிய சம்பவம்.., பதற்றத்தில் பெங்களூர் மக்கள்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *