கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை எனவும், தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சத்து 50 ஆயிரம் ஊதியத்துடன் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொனால்டோவின் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரொனால்டோ ஹோட்டல் :
தற்போது உலகின் அதிக சம்பளம் வாங்கும் போர்ச்சுகல் கால்பந்து விளையாட்டு வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.
அந்த வகையில் 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டு மட்டுமின்றி பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒன்று தான் இந்த ஹோட்டல் தொழில்.
அந்த வகையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கிறிஸ்டியானோ ரொனால்டோ நட்சத்திர ஹோட்டல்களை நடத்தி வருகிறார். மேலும் Pestana ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து ரொனால்டோ ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஹோட்டல் தொழிலுக்கு ஏறத்தாழ 30 மில்லியன் பவுண்டு தொகையை ரொனால்டோ முதலீடு செய்துள்ளாதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Cristiano Ronaldo Pestana CR7 Gran Via restaurant job Announcement to work
தற்போது உலகின் ஐந்து பெருநககரங்களில் ரொனால்டோவின் Pestana CR7 Gran Via Hotel என்ற ஹோட்டல் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இதனையடுத்து தற்போது மாட்ரிட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெய்டர், சூப்பர்வைசர், ரிசப்செனிஸ்ட், பார் அசிஸ்டென்ட், ஜூனியர் வெய்டர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அடிப்படை தகுதி :
Pestana CR7 Gran Via ஹோட்டலில் பணியில் சேர தேர்வர்கள் சம்மந்தப்பட்ட அந்தெந்த துறைகளில் கல்வி மற்றும் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். அத்துடன் திறம்பட ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேச தெரிந்து இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஹோட்டலில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது – அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
சம்பளம் :
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹோட்டலில் பணியில் சேருபவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சத்து 50 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 50 நாட்கள் விடுமுறை, பிறந்த நாள் போனஸ், அனைத்து ஹோட்டல் பார்கள் மற்றும் உணவு விடுதிகளில் 50 சதவீதம் தள்ளுபடி மற்றும் இலவச காப்பீடு என பல்வேறு கவர்ச்சிகர சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.