சுங்கச்சாவடி ரசீதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அடேங்கப்பா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!சுங்கச்சாவடி ரசீதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? அடேங்கப்பா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

சுங்கச்சாவடி ரசீதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்: பொதுவாக வாகன ஓட்டிகள் தாங்கள் இருக்கும் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி அந்த வழியாக செல்லும் போது இடையில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அந்த கட்டண ரசீது மூலம் நமக்கு கிடைக்கும் பலன் என்பது குறித்து யாருக்கும் தெரிந்த பாடில்லை.

அப்படி அந்த சுங்க வரி ரசீது மூலம் நாம் பெறும் பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் பொழுது வழியில் உள்ள டோல்கேட்டில் சுங்க வரி கட்டணம் கட்டி ரசீது பெற்று அங்கிருந்து செல்லும் போது, நீங்கள் பயணம் செய்த கார் திடீரென நின்று போனால், உங்கள் காரை அங்கிருந்து இழுத்துச் செல்வதற்கும் மற்றும் சுமந்து செல்வதற்கு சுங்கச்சாவடி நிறுவனம் பொறுப்பேற்கும்.

அதே போல எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது திடீரென நீங்கள்  சென்று கொண்டிருந்த கார் பேட்டரி தீர்ந்து போனாலோ அல்லது பெட்ரோல் இல்லாமல் பாதியிலேயே கார் நின்றாலோ சுங்கவரி கட்டண ரசீதில் உள்ள 1033 என்ற நம்பருக்கு அழைக்க வேண்டும்.

அப்படி அழைத்தார்கள் என்றால் அடுத்த 10 நிமிடங்களில் பத்து நிமிடங்களில் சுங்கச்சாவடி நிறுவனம் உதவி செய்து 5 முதல் 10 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுத்து உங்களை பத்திரமாக வழி அனுப்பி வைக்கும்.

அதுமட்டுமின்றி உங்களுடைய கார் வழியில் பஞ்சர் ஆனாலும் கூட  உதவிக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் உங்களுடைய கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென விபத்துக்குள்ளாகும் சமயத்தில் நீங்களோ அல்லது உங்களுடன் வந்த நபர்கள் யாராயினும் முதல் சுங்கவரி ரசீதில் உள்ள தொலைபேசி நம்பருக்கு தகவல் கொடுக்க வேண்டும். உடனே சுங்கச்சாவடி நிறுவனம் அங்கு வந்து முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்.

Also Read: மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம் – நூதனமான பாரம்பரியத்தை பின்பற்றும் கிராமம் – அதுவும் தமிழ்நாட்டுலயா?

அதே போல காரில் சென்று கொண்டிருக்கும் போது உங்களுக்கோ அல்லது உங்களுடன் பயணம் செய்த நபருக்கோ உடல்நிலை உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும்

அந்த நம்பருக்கு Call செய்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

அப்போது உங்களுக்கு ஆம்புலன்ஸை அமைத்து தருவது சுங்கச்சாவடி நிறுவனங்களின் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தான் சுங்கச்சாவடி ரசீதை கவனமாக வைத்துக் கொள்ள சுங்கச்சாவடி நிறுவனம் கூறி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *