தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN) என்பது தமிழ்நாட்டில் திருவாரூரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகமாகும். இது இப்போது 27 துறைகளில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. CUTN ல் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN)
காலிப்பணியிடங்களின் பெயர் :
Guest Faculty Positions
சம்பளம் :
மாத சம்பளமாக Rs. 50,000 வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு Master Degree in Applied Psychology & Ph.D. in Applied Psychology/ NET துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயது வரம்பு 70 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது வரம்பு பொருந்தும்.
NMDC வேலைவாய்ப்பு 2024 ! 120 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! தேர்வு கிடையாது !
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து 08.02.2024 தேதி வரை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி :
hodpsychology@cutn.ac.in
தேர்ந்தெடுக்கும் முறை :
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
12-02-2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.
பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது. ஏதேனும் காலியிடங்களை நிரப்பவும் அல்லது காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க /குறைக்கவும் பல்கலைக்கழகத்திற்கு உரிமை உள்ளது.
பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
எந்தவொரு வடிவத்திலும் பிரச்சாரம் செய்வது அல்லது அரசியல் அல்லது வேறுவிதமான செல்வாக்கைக் கொண்டுவரும் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் புதுப்பிப்புகளுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விருந்தினர் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகள், ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் விடுப்பு போன்ற பலன்கள் வழங்கப்படாது.