விஜய் டிவி கண்ணில் மண்ணை தூவிய CWC பிரபலங்கள்.., கொக்கி போட்டு தூக்கிய சன்டிவி.., இனி நாங்க தான்?விஜய் டிவி கண்ணில் மண்ணை தூவிய CWC பிரபலங்கள்.., கொக்கி போட்டு தூக்கிய சன்டிவி.., இனி நாங்க தான்?

விஜய் டிவி பிரபலங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி ஷோவுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த ஷோவின் ஸ்பெஷல் என்னவென்றால் வெறும் சமையல் மட்டும் கொடுக்காமல் அதோடு சேர்த்து காமெடியையும் கொடுத்ததால் தான் இந்த ஷோ இவ்வளவு பெரிய ஹிட் கொடுத்தது. இதுவரை நான்கு சீசன்களை கடந்த ஷோ, விரைவில் 5வது சீசனையும் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியின் நடுவார்களான செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் வரும் சீசனில் கலந்து கொள்ள வில்லை என்று வீடியோ மூலம் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி ஒரு புதிய ஷோவில் உங்களோடு சந்திக்கிறேன் என்று வெங்கடேஷ் பட் கூறிய நிலையில், தாமுவும் இந்த ஷோவில் கலந்து கொள்வார் என கூறியிருந்தார். இந்நிலையில் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. மேலும் நான்கு சீசன்களை நடத்தி கொடுத்த அவர்கள் 5வது சீசனில் மட்டும் பங்கேற்காதது ஏன்? என்றும் இப்படி விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு போக சம்பளம் தான் காரணமா? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் உண்மையான காரணம் தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டையே உலுக்கிய கல்லூரி மணைவி கொலை வழக்கு.., குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *