வங்கக்கடலில் உருவானது டானா புயல்: சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவானது டானா புயல்
அதில் கூறியிருப்பதாவது, ” காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான நிலையில், அது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. எனவே அதே பகுதியில் நாளை புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அக்டோபர் 24 ஒடிசாவின் பூரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கு இடையே டானா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த புயல் மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!
இதனால், ஒடிசா, மே.வங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே டானா புயல் காரணமாக மேற்கு வங்காளத்தின் மேற்கு மேதினிபூர், ஜார்கிராம், ஹுக்ளி, அவுரா, தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், பாங்குரா மற்றும் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் அக். 26 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க ஏலம் அறிவிப்பு
தமிழகத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை
இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்