தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 28 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டானா புயல் முன்னெச்சரிக்கையாக 28 ரயில்களின் சேவை ரத்து
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டானா புயல் :
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை புயலாக மாறி கரையை கடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த புயலுக்கு டானா என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்து :
மேலும் இந்த டானா புயலானது தற்போது தீவிர புயலாக உருமாறி 120 கி.மீ வேகத்தில் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே 24 ஆம் தேதி இரவு தீவிர புயலாக உருமாறி வரும் அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டானா தீவிர புயல் அறிவிப்பு காரணமாக தற்போது முன்னெச்சரிக்கையாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
BSNL-லின் புதிய லோகோ வெளியீடு – 7 புதிய சேவைகள் தொடக்கம் !
இந்நிலையில் இந்த டானா புயல் முன்னெச்சரிக்கையாக 28 ரயில்களின் சேவை ரத்து வரும் அக்டோபர் 24 மற்றும் 26 ம் தேதி வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.