அடக்கடவுளே., 19 வயதில் உயிரிழந்த "தங்கல்" பட நடிகை.., இந்த சின்ன வயசுல இப்படியொரு பாதிப்பா.., கண்கலங்கிய ரசிகர்கள்!! அடக்கடவுளே., 19 வயதில் உயிரிழந்த "தங்கல்" பட நடிகை.., இந்த சின்ன வயசுல இப்படியொரு பாதிப்பா.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் அமீர்கான். இவர் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் தான் “தங்கல்”. இப்படம் மல்யுத்த வீராங்கனைகளான தீபிகா போகத் மற்றும் பபிதா போகத் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் பாத்திமா சனா, சான்யா மல்கோத்ரா, சாக்ஷி தன்வர் என பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட இந்த படம் 2000 கோடி வசூல் செய்த இந்த படத்தில் சிறு வயது குழந்தையாக பபிதாவாக சுஹானி பட்நாகர் என்பவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் குறித்து சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சுஹானி பட்நாகர் என்ற நடிகை இன்று பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனதால், அதாவது உடலில் திரவம் படிந்ததால்(Fluid Accumulation) பிரச்னைக்காக AIIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஃபரிதாபாத்தில் உள்ள செக்டார் 15ல் உள்ள அஜ்ரோண்டா சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அவருக்கு பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  பயங்கர வெடி விபத்து.., 10 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு.., சிவகாசியில் பரபரப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *