NIRTல் data entry வேலைவாய்ப்புNIRTல் data entry வேலைவாய்ப்பு

   NIRTல் data entry வேலைவாய்ப்பு தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் 1956ம் ஆண்டு முதல் இந்தியாவில் சென்னையை தலைமை இடமாகக்கொண்டு இயங்கி வருகின்றது. இங்கு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நிரப்ப இருக்கின்றனர். எனவே காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காண்போம்.

NIRTல் data entry வேலைவாய்ப்பு

NIRTல் data entry வேலைவாய்ப்பு

நிறுவனத்தின் பெயர் :

   NIRT – National Institute For Research In Tuberculosis தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் இயங்கி வருகின்றது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  1. திட்ட தொழில் நுட்ப அதிகாரி ( மருத்துவ சமூக பணியாளர் ) – Project Technical Officer ( Medical Social Worker )

  2. திட்ட தொழில் நுட்ப வல்லுநர் நிலை 3 ( களப்பணியாளர் ) – Project Technician 3 ( Field Worker )

  3. திட்ட தொழில் நுட்ப வல்லுநர் நிலை 3 ( லேப் டெக்ஷியன் ) – Project Technician 3 ( Lab Technician )

  4. திட்ட டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு A – Project Data Entry Operator Grade A போன்ற பணியிடங்கள் NIRTல் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  1. திட்ட தொழில் நுட்ப அதிகாரி ( மருத்துவ சமூக பணியாளர் ) – 1

  2. திட்ட தொழில்நுட்ப வல்லுநர் நிலை 3 ( களப்பணியாளர் ) – 4

  3. திட்ட தொழில்நுட்ப வல்லுநர் நிலை 3 ( லேப் டெக்ஷியன் ) – 1

  4. திட்ட டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு A – 2 என மொத்தம் எட்டு காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

கல்வித்தகுதி :

  1. மருத்துவ சமூக பணியாளர் :

    அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் சமூக அறிவியல் / சமூகப்பணி / சமூகவியல் / மருத்துவம் போன்ற துறைகளில் இளங்கலை பட்டப்படிப்புடன் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். மேலும் மருத்துவ சமூகவியல் / மானுடவியல் / உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  2. களப்பணியாளர் :

    பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் PMW மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் இரண்டு வருட டிப்ளமோ அல்லது DMLT ஒரு வருட படிப்பு முடித்தவர்கள் அல்லது B.Sc முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இரண்டு வருடம் கள ஆய்வில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு 2023 ! 600 பணியிடங்கள் காலியாக உள்ளது  ! 

  3. லேப் டெக்னீஷின் :

    பனிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் PMW மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் இரண்டு வருட டிப்ளமோ அல்லது DMLT ஒரு வருட படிப்பு முடித்தவர்கள் அல்லது B.Sc முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இரண்டு வருடம் கள ஆய்வில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  4. திட்ட டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் :

    அரசு கீழ் இயங்கும் ஏதேனும் ஒரு கல்வி நிலையங்களில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு மணி நேரத்தில் 8000 வார்த்தைகள் கணினியில் இயக்கும் திறன் பெற்று இருக்க வேண்டும்.

வயதுத்தகுதி :

  1. மருத்துவ சமூக பணியாளர் – 30 வயதிற்குள் 

  2. களப்பணியாளர் – 30 வயதிற்குள் 

  3. லேப் டெக்னீஷின் – 30 வயதிற்குள் 

  4. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 25 வயதிற்குள் இருப்பவர்கள் NIRTல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் :

  1. மருத்துவ சமூக பணியாளர் – ரூ. 32,000

  2. களப்பணியாளர் – ரூ. 18,000

  3. லேப் டெக்னீஷின் – ரூ. 18,000

  4. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – ரூ. 17,000 வரையில் மாத ஊதியமாக தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

வேலையிடம் :

  தமிழ்நாட்டில் மதுரை , வேலூர் , திருவள்ளூர் மற்றும் சென்னை போன்ற இடங்களில் காலிப்பணியிடம் இருக்கின்றது.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  NIRTல் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

OFFICIAL NOTIFICATION DOWNLOAD

                     

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

  தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கின்றனர்.

நேர்காணல் நாள் :

  வருகின்ற 25.09.2023 திங்கள் கிழமை அன்று காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரையில் நேர்காணல் நடைபெற இருக்கின்றது.

நேர்காணல் நடைபெறும் இடம் :

  NIRT நிறுவனம் , 

  எண் – 1,

  மேயர் சத்திய மூர்த்தி சாலை ,

  சேத்பேட்டை ,

  சென்னை – 600031 ,

  தமிழ்நாடு .   

விண்ணப்பபடிவத்துடன் இணைக்க வேண்டியவை :

  1. கல்வி சான்றிதழ் நகல் 

  2. சாதி சான்றிதழ் நகல் 

  3. பிறப்பு சான்றிதழ் நகல் 

  4. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 

  5. அனுபவ சான்றிதழ் 

  6. அனைத்து நகல்கள் ஒரிஜினல்களும் நேர்காணலின் போது கையில் வைத்துக்கொள்ள வேண்டும். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *