பிரபல நடிகர் கூட்டணியில் "DD ரிட்டர்ன்ஸ் பார்ட் 2" - அப்படி போடு…, செம கலக்கு கலக்கும் சந்தானம்!!பிரபல நடிகர் கூட்டணியில் "DD ரிட்டர்ன்ஸ் பார்ட் 2" - அப்படி போடு…, செம கலக்கு கலக்கும் சந்தானம்!!

Kollywood update: பிரபல நடிகர் கூட்டணியில் “DD ரிட்டர்ன்ஸ் பார்ட் 2”: சின்னத்திரையில் தனது கெரியரை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சந்தானம். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு காமெடி செய்து வந்த இவர், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

மேலும் இவரின் சினிமா கெரியரில் முக்கிய படமாக இருந்து வரும் ஒரு திரைப்படம் என்றால் அது தில்லுக்கு துட்டு தான். அதன் 2 பார்ட்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான DD ரிட்டர்ன்ஸ் படம் 100 கோடி வசூலை அள்ளி குவித்தது.

Also Read: “மகாராஜா” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? –  படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கூடிய விரைவில் DD ரிட்டர்ன்ஸ் பார்ட் 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும் படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *