தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் வருகிற டிச 12ல் கனமழை பொளக்க போகுது என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கனமழை:
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் அடுத்த கட்டம் நாளை தொடங்க இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைய கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும். அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!
குறிப்பாக வருகிற, டிசம்பர் 12ம் தேதி 23 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி, சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், அரியலூர், விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!
ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!
2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் நாளை (10.12.2024) மின்தடை! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!