அயல்நாட்டை போல இனி இந்தியாவில் ஆழ்கடல் சுற்றுலா தொடக்கம். அதற்கான சுற்றுலா தலத்தை முதன்முதலில் குஜராத்தில் உள்ள துவாரகாவில் நிறுவ அம்மாநில அரசு திட்டம் வகுத்துள்ளது. சுற்றுலா பிரியர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்தியாவில் ஆழ்கடல் சுற்றுலா தொடக்கம்
மனிதனை போலவே இவ்வுலகத்தில் பல்வேறு ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கிருக்கின்றன. இந்த உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகை படுத்த பட்டுள்ளன. அவைகள் நிலத்தில் வாழ்வன, நீரில் வாழ்வன என கூறலாம். பெரும்பாலும் நிலத்தில் வாழும் உயிர்களை நாம் காண்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
ஆனால் நீரில் வாழும் உயிர்களையும் , ஆழ்கடலையும் நாம் தொலைக்காட்சியிலும் , விடீயோக்களிலும் மட்டுமே கண்டு ரசித்துள்ளோம். பெரும்பாலும் அயல்நாட்டில் மட்டுமே இந்த வசதிகள் இருந்தன. தற்போது இந்தியாவிலும் இது நடைமுறைக்கு வர விருக்கிறது.
சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் ! ஸ்பாட் பதிவும் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு !
ஆழ்கடல் எப்படி இருக்கும் என்ற ஆவல் எல்லா மனிதனுக்கும் உண்டு. அப்படி ஆழ்கடலில் உள்ளவற்றை பார்க்க ஆசை படுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி அதற்கான முதல் சுற்றுலா தலத்தை தனது மாநிலத்தின் துவராகவில் நிறுவ இருக்கிறது. இதற்காக Mazgaon Dock Limited என்ற நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் உதவியுடன் நீர்மூழ்கி கப்பல் மூலம் சுமார் 24 பயணிகள் கடலுக்குள் உள்ளவற்றை சுற்றி பார்க்கலாம். சாகச பிரியர்களுக்கு இது ஒரு அசத்தல் வாய்ப்பு என்றே கூறலாம் .மேலும் இது எப்போது நடைமுறைக்கு வரும் என்று கூடிய விரைவில் குஜராத் மாநில அரசு வெளியிட இருக்கிறது.
ஆழக்கடலையும் ஆழம் பார்க்க மனிதன் புறப்பட்டு விட்டான்.