மூக்குக்கு மேல் புகை விடும் சியான் விக்ரமின் டூப் மகள் - சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்!!மூக்குக்கு மேல் புகை விடும் சியான் விக்ரமின் டூப் மகள் - சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்!!

மூக்குக்கு மேல் புகை விடும் சியான் விக்ரமின் டூப் மகள்: தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனை தொடர்ந்து ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிக்கும் நடிகர் என்றால் அது சியான் விக்ரம் தான். தற்போது இவர் நடிப்பில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் விக்ரமின் சினிமா கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தான் “தெய்வத்திருமகள்”. இப்படத்தில் மனநலம் குன்றிய தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் பாச போராட்டத்தை பற்றி தான் கதையே.

இப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்து பேமஸ் ஆனவர் தான் பேபி சாரா அர்ஜுன். இப்படத்தில் அவருடைய கியூட் நடிப்பை பார்த்து ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது. இதனை தொடர்ந்து சைவம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். இதையடுத்து திரையுலகில் தலைகாட்டாமல் இருந்து வந்த அவர் மளமளவென வளர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

மூக்குக்கு மேல் புகை விடும் சியான் விக்ரமின் டூப் மகள்

இந்நிலையில் சன்னி லியோன் நடித்த கொட்டேஷன் கேங் (QG) என்ற படத்தில் பேபி சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. அதில் ஒரு போஸ்டரில் பேபி சாரா மூக்குக்கு மேல் சிகரெட்டால் புகை விடுவது போல் அமைந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே இது மாதிரி புகைபிடிப்பது போல் போட்டோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.  

Gold Rate Today: தங்கம் விலை அதிரடி குறைவு.. ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா? நகை பிரியர்கள் ஹாப்பி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *