Home » செய்திகள் » டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 பிப்ரவரி 5ல் நடைபெறும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 பிப்ரவரி 5ல் நடைபெறும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 பிப்ரவரி 5ல் நடைபெறும்.., தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Tamil News Today: இந்த ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025 பிப்ரவரி 5ல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதியுடன் சட்டப் பேரவையின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. எனவே அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே இந்த தேர்தலில் தற்போது ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட இருக்கிறது.

இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, ”  வருகிற பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக கிட்டத்தட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு மையங்கள் அமைக்கப்படும். மேலும் நடக்க இருக்கும் தேர்தலுக்கு  வருகிற பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்சி வேட்பாளர்கள்  மனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 17ம் தேதி கடைசி நாள் என்று தெரிவித்துள்ளார். மேலும் வேட்பு மனு மீதான பரிசீலனை 18-ந் தேதியும், வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 20-ந் தேதி என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் HMPV வைரஸ் பாதிப்பு.., முக கவசம் அணிவது கட்டாயம்?.., அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!!

திபெத் – நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 36 பேர் பலி.., இந்தியாவிலும் பாதிப்பு?

தமிழகத்தில் நாளை (08.01.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக பவர் கட் விவரம்!

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!

ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு.., பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு.., குஷியில் மக்கள்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top