சீன விசா முறைகேடு வழக்கு. சிவகங்கை MP கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சீன விசா முறைகேடு வழக்கு :
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி MP யாக உள்ள கார்த்தி சிதம்பரம், கடந்த 2011ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த காலக்கட்டத்தில் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த தல்வாண்டி சபோ பவர் லிமிடெட் என்ற நிறுவனம் பஞ்சாப் மாநிலத்தில் மின் உற்பத்தி மையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்த பணி தாமதமான காரணத்தினால் பணிக்காக சீனாவில் இருந்த வந்திருந்த சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களின் விசாவிற்கான காலம் முடிவடைந்தது.
அந்த வகையில் அவர்களுக்கு மீண்டும் விசா நீடிப்பு செய்யும் வகையில் அப்போதைய அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தை நாடியதாக கூறப்படுகிறது.
விதிகளை மீறி விசா வழங்கல் :
இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த 263 ஊழியர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வேதாந்தா நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும்,
அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரராமன் என்பவருக்கும் ரூ.50 லட்சம் லஞ்சமாக கொடுத்தாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அத்துடன் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பாஸ்கரராமனை கைது செய்தனர்.
மேலும் சிபிஐ புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்து சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது.
டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு :
சீன விசா முறைகேடு வழங்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா ! எந்த தொகுதி முதலிடத்தில் உள்ளது தெரியுமா ?
இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நேரில் ஆஜரான கார்த்தி சிதம்பரம் மற்றும் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சீன விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.