
Breaking News: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்1 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர், அங்கிருந்தபடியே ஆட்சியை நடத்தி வந்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்
இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தன் கட்சிக்கு பரப்புரை ஆற்ற வேண்டும் என்றும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதன்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் முடிந்த ஓரிரு நாட்களில், அதாவது கடந்த ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் வேறு ஒரு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி மீண்டும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Also Read: தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வான 82 வயது பாட்டி – திறமைக்கு வயது தடையில்லை!!
மேலும் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த வழக்கு இன்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2024: இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது
தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறை
தமிழ்நாட்டில் நாளை (12.07.2024) மின்தடை பகுதிகள்
- delhi cm Arvind Kejriwal ↩︎