டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் விடுதலை ஆகிறாரா?
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் விடுதலை ஆகிறாரா? – மதுபான கொள்கை ஊழல் காரணமாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு அளித்து வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இடைக்கால ஜாமீனில் வெளியே விட இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக நடந்த விசாரணையில், ” நாடாளுமன்ற தேர்தலையொட்டி டெல்லி முதல்வர் வெளியே இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவருக்கு மே 7ம் தேதி முதல் ஜாமீன் கொடுக்க இருப்பதாகவும். மே 7ஆம் தேதி அன்று நீதிமன்றம் மீண்டும் கூடும் போது இடைக்கால ஜாமீன் மனு மீதான வாதங்களுக்கு தயாராக இருக்குமாறு அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டு உள்ளது. அதை வைத்து பார்க்கும் பொழுது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட் தடை: வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் அறிக்கை!!