டெல்லி சமூக மேம்பாட்டுத் துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா
மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், டெல்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் டெல்லி சமூக மேம்பாட்டுத் துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதுமட்டுமின்றி அவர் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில், ” ஊழலை எதிர்த்துப் போராட பிறந்தது தான் ஆம் ஆத்மி கட்சி. ஆனால் இப்பொழுது அந்தக் கட்சி ஊழலில் சிக்கி தவிக்கிறது. இதனால் அமைச்சர் பதவியில் இருந்து பணியாற்ற எனக்கு மிகவும் கடினமாகிவிட்டது. இதன் காரணமாவே அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தேன். தற்போது வரை அரசியல் மாறவில்லை, ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார். எனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என தெரிவித்தார்.