Home » செய்திகள் » டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பீதியில் பெற்றோர்கள்!

டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பீதியில் பெற்றோர்கள்!

டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பீதியில் பெற்றோர்கள்!

டெல்லியில் உள்ள ஆறு  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடந்த சில மாதங்களாக தமிழகம் உட்பட பலவேறு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதை தடுக்க காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளான துவாரகா,  நொய்டா உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது  இன்று காலை 8.30 மணியளவில் துவாரகா பப்ளிக் பள்ளி,  டெல்லி பப்ளிக் பள்ளி,  மதர் மேரிஸ் உள்ளிட்ட 6 பள்ளிகளுக்கு  இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வீட்டிற்கு அனுப்பி மொத்தமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குற்றவாளிகள் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top