
தற்போதைய நவீன உலகத்தில் திருட்டு, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சொந்த வீட்டில் கை வரிசையை காட்டிய பெண் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, டெல்லி, உத்தம் நகரின் சேவாக் பார்க் ஹோம் பகுதியில் வகித்து வரும் கமலேஷ் என்ற பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வீட்டில் கல்யாணத்திற்காக எடுத்த நகைகளை திருட்டு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணையை நடத்தி வருகின்றனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவை செக் பார்த்த போது, சுவேதா என்ற பெண் திருடியது தெரியவந்தது. அவர் வேறு யாரும் இல்லை கமலேசின் தங்கச்சி என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை விசாரித்த நிலையில், என்னுடைய அம்மா, என்னை விட தங்கச்சி மீது அதிக பாசம் கொண்டு இருந்ததால், பொறாமையில் இவ்வாறு செய்து விட்டேன் என்றும், அது போக தனக்கு சில கடன்கள் இருந்ததாலும் இதை செய்ததாக தெரிவித்தார்.