டிமாண்டி காலனி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு - விக்ரம் பிரசாந்துடன் மோதும் அருள்நிதி!டிமாண்டி காலனி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு - விக்ரம் பிரசாந்துடன் மோதும் அருள்நிதி!

அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு: தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் அருள்நிதி. இவர் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக சொல்ல போனால் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி திரைப்படம் நல்ல ரீச்சை கொடுத்தது.

அருள்நிதியை சினிமா கெரியரில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றதே இந்த படம் தான். இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக சில வருடங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சில போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின.

அப்புறம் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படத்தில் அருள்நிதியுடன் சேர்ந்து பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் முழு படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து படக்குழு இப்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. demonte colony 2

Also Read: KGF 3யில் நடிக்கும் தல அஜித்!! அப்படி போடு ரசிகர்களுக்கு காத்திருக்கும் வெறித்தனமான சம்பவம்

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. kollywood cinema news

அதாவது அருள்நிதி நடித்த ‘டிமாண்டி காலனி – 2’ திரைப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த நாளில் விக்ரமின் “தங்கலான்”, பிரசாந்தின் “அந்தகன்” மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த “ரகு தாத்தா” வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. tamil cinema news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *