தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் - 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு !தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் - 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு !

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவ் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் தி மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனமானது சுமார் 150 ஆண்டுகள் பழமையானது.

இதனால் காரணமாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியாக சுமார் ரூ.525 கோடி முதலீடு இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். Devanathan Yadav arrested in a financial fraud case

அத்துடன் இந்த நிதி நிறுவனத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் பாஜக வேட்பாளராக சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தேவநாதன் யாதவ் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

மேலும் இவரது பணிக்காலத்தில் நிதி நிறுவனம் இயங்கி வந்த பழமையான கட்டிடமானது புனரமைக்கப்பட்டது.

இதனையடுத்து நிதி நிறுவனத்தின் ரகசிய அறையில் முதலீட்டாளர்களின் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து முன்னாள் நிர்வாகிகள் 300 கிலோ தங்கம் வைத்திருந்ததாகவும்,

மேலும் அந்த தங்கத்தை தேவநாதன் புனரமைப்பு என்ற பெயரில் எடுத்து சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேசமயம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட போது தேர்தல் செலவுக்காக பல கோடி ரூபாய் ரொக்கமாக நிதி நிறுவனத்தில் இருந்து தன்னிச்சையாக எடுத்து செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சரியாக முதிர்வு தொகை மற்றும் வட்டி கொடுக்காமல் இழுத்து அடித்து வந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தேவநாதன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

செப்.1 முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் முக்கிய மாற்றங்கள் – என்னென்ன தெரியுமா ?

இந்நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான பாஜக பிரமுகர் தேவநாதன் அலுவலகத்தில் இருந்து சுமார் 3 கிலோ தங்கத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் பறிமுதல் செய்தது.

இதனை தொடர்ந்து தேவநாதனின் அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தி தங்கத்தை கைப்பற்றியது தொடர்பாக நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *