அடக்கடவுளே.., உயிர் போகும் நிலையில் தனுஷின் ஆடுகளம் பட நடிகர்.. உங்களுக்கா இந்த நிலைமை?.., வருத்தத்தில் ரசிகர்கள்!!!அடக்கடவுளே.., உயிர் போகும் நிலையில் தனுஷின் ஆடுகளம் பட நடிகர்.. உங்களுக்கா இந்த நிலைமை?.., வருத்தத்தில் ரசிகர்கள்!!!

ஆடுகளம் பட நடிகர்

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச வருடங்களில் ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வெற்றிமாறன். பல தேசிய விருதுகளை வென்று குவித்த இவர், தற்போது விடுதலை 2 படத்தை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்து வரும் வெற்றி மாறனின் கெரியரில் மாஸ்டர் பீஸ் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம். இப்படத்தில் தனுசுடன் இணைந்து டாப்ஸி,  வி.ஐ.எஸ். ஜெயபாலன், நரேன், கிஷோர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதில் நடித்த வி.ஐ.எஸ். ஜெயபாலன் ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு எழுத்தாளரும் கூட. இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த இவர் தனது சிறு வயதில் இருந்தே எழுவதற்கு ஆர்வமாக இருந்து வந்தவராம். பல புத்தகங்களையும் எழுதியுள்ளாராம். ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் நடிக்க தொடங்கிய அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

விஜய் டிவி கண்ணில் மண்ணை தூவிய CWC பிரபலங்கள்.., கொக்கி போட்டு தூக்கிய சன்டிவி.., இனி நாங்க தான்?

இந்நிலையில் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையால் தற்போது மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அவருடைய குடும்பம் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால், இவரை வந்து பார்க்க கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *