ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம் ! - தீர்ப்பு தேதி அறிவிப்பு !ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம் ! - தீர்ப்பு தேதி அறிவிப்பு !

விவாகரத்து வழக்கு விசாரணையில் ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்களின் திருமண வாழ்க்கையை முறித்துகொல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Dhanush – Aishwarya divorce case verdict on 27 Nov 2024

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஆஜராகினர்.

அத்துடன் கடந்த 3 முறை விசாரணைக்கு அழைத்தும் தனுஷ் – ஐஸ்வர்யா ஆஜராகாத நிலையில், இன்று இருவரும் நேரில் ஆஜராகி உள்ளனர். இதனையடுத்து தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். Madras family welfare court judgement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *