தனுஷை தனது மகன் என்று உரிமை கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கதிரேசன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார்
பிரபல நடிகரான தனுஷை தனது மகன் என்று உரிமை கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் தான் மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் கதிரேசன் – மீனாட்சி தம்பதியர். இந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் இருந்து வரும் நிலையில், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் போராட்டம் நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த வருடம் கதிரேசன் (70) உடல் நல குறைவு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதையடுத்து பூரண குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அவர் காலமானார். இதையடுத்து அவரது உடலானது திருப்புவனத்தில் உள்ள கதிரேசனின் மகள் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பு காரணமாக அவருடைய (டி.என்.ஏ) சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று அவருடைய மனைவி வக்கிலிடம் தெரிவித்த நிலையில், அதை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.