
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் தனுஷ், பிரபல இயக்குனரும் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளன. இதனை தொடர்ந்து பல வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த ஆண்டு பிரிய போவதாக அறிவித்தனர். இதனால் அவர்களுடைய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கிய நிலையில், தற்போது யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

மேலும் இவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் முதல் ரசிகர்கள் வரை நினைத்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை அவர்கள் சேரவில்லை. இப்பொழுது இருவரும் தங்களது கெரியரில் பிசியாக இருந்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் நடந்த கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் மகன்கள் கலந்து கொண்ட நிலையில் லால் சலாம் ஆடியோ லாஞ்சிலும் யாத்ரா மற்றும் லிங்கா கலந்து கொண்டனர். எனவே தனது மகன்களுக்காகவாது இருவரும் ஒன்று சேருவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.