தனுஷ் பட நடிகை
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அனேகன். இப்படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கேரள நடிகை லீனா. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், கடந்த 2004 ஆம் ஆண்டு அபிலேஷ் குமார் என்பவரை கல்யாணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கசப்பான நிகழ்வால் 2013ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று செய்திகள் பரவி வந்த நிலையில். தற்போது அவர் தனது இணையதள பக்கம் இரண்டாம் திருமணம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், ” ககன்யான் விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை நான் கடந்த ஜனவரி மாதம் மணமுடித்தேன். அவருக்கு சமீபத்தில் பிரதமர் மோடி, இந்திய விமானப்படை போர் விமானி கேப்டன் முதல் இந்திய விண்வெளி வீரர் விருது வழங்கினார். அது எனக்கும் கேரள நாட்டுக்கும் பெருமையாக இருந்தது என்று கூறியுள்ளார்.