நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் கடந்த 2015ம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதாவது அந்த மனுவில், தனுஷ் பள்ளி படிப்பில் இருக்கும் பொழுது வீட்டை விட்டு ஓடி விட்டார் என்றும், தற்போது நல்ல நிலைக்கு வந்து விட்டதும் எங்களை மறந்து விட்டார் என்றும், பெற்றோர்கள் என்ற உரிமையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனுஷ் காட்டிய ஆதாரங்கள் அனைத்தும் போலி என்று மதுரை கிளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இந்த மனு தற்போது நீதிபதி ராமகிருஷ்ணன் விசாரணைக்கு வந்த நிலையில், அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தவறான நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். குற்றத்தை நிரூபிக்க அவர்களிடம் எந்தவித சாட்சிகளும் இல்லை. இது ஒரு அபத்தமான வழக்கு. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.